தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை முக்கூடு சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. ஒரு சில வியாபாரிகள் குப்பைகளை மூட்டைகளாக கட்டி சாலையோரத்தில் போட்டுச்செல்கின்றனர். இதன்காரணமாக சாலையோரம் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.