நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-05-11 07:04 GMT

நாகர்கோவில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைந்து நடைபாதை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் மாடன்சாமி கோவில் அருகில் சிலாப்புகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரம் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

-தாமோதரன், நாகர்கோவில்.

மேலும் செய்திகள்