கரூர் மாவட்டம் கோம்புப்பாளையம் ஊராட்சி நடையனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு பின்புறம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளின் நலன் கருதி விவசாய களம் அமைக்கப்பட்டது. இந்தக்களம் தரைக்களமாக இருந்ததால் மழை காலங்களில் விவசாய விளை பொருட்கள் மழை நீரில் அடித்துச் சென்றது. மேலும் களம் கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக உயரமான புதிய களம் கட்டப்பட்டு அந்த களத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த விளை பொருட்களை கொண்டு வந்து போட்டு காயவைத்து மூட்டையாக கட்டி சென்று வருகின்றனர். இந்நிலையில் களம் பராமரிப்பின்றி இருப்பதால் களத்திற்குள் ஏராளமான செடிகளும், களத்தை ஒட்டி ஏராளமான முள் செடிகளும் முளைத்து பரவி வருகிறது. இதனால் களத்தை விவசாயிகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.