புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே மேலத்தானியம் உள்ளது. இதன் சுற்றுவட்டார கிராமங்களான சூரப்பட்டி, வடக்கிப்பட்டி, எம்.உசிலம்பட்டி, ஆவாம்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, அம்மாபட்டி, பில்லனிவயல், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், இடையம்பட்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அதிக அளவில் ஆடு, மாடு, கோழி, நாய்கள் என வளர்த்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாடு, ஆடுகளை சிகிச்சைக்காக காரையூர் அல்லது சடையம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே கால்நடை வளர்பவர்களின் கஷ்டத்தை போக்கவும், கால்நடைகளை பாதுகாக்கவும் மேலத்தானியத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.