திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடி புறக்காவல் நிலையத்தை அடுத்துள்ள ஆதிதிராவிடர் தெருவில் சுமார் நூறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இருப்பினும் இப்பகுதியில் தெரு விளக்கு, குடிநீர், முறையான வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.