கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு கன்னக்குறிச்சி-புதுமடம் இணைப்பு சாலையில் ஆலங்கால் ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே பாலம் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் உள்ள தென்னை, வாழை விவசாயிகள் ஓடையை கடந்து செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அவர்கள் மரச்சட்டத்தை பயன்படுத்தி அபாய நிலையில் ஓடையை கடந்து செல்கின்றனர். எனவே, விவசாயிகள் நலன்கருதி ஓடையின் குறுக்கே புதிதாக பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.