கோவையில் கொளுத்தும் வெயில் காரணமாக தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள நரசாம்பதி குளம், புதுக்குளம், பேரூர் பெரியகுளம், சொட்டையாண்டி குளம், கோளரம்பதிகுளம் உள்ளிட்டவை வேகமாக வறண்டு வருகின்றன. இதை பயன்படுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் குளங்களும் ஆழப்படுத்தப்படும். விவசாயிகளும் பயன் பெறுவார்கள். அரசுக்கும் வருமானம் கிடைக்கும். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?.