கோவை புலியகுளம் மசால் லே அவுட் பகுதியில் பொதுக்கழிப்பறை ஒன்று உள்ளது. இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த கழிப்பறையை பயன்படுத்தவே பலரும் தயங்குகின்றனர். எனவே அந்த கழிப்பறையை முறையாக பராமரிக்க வேண்டும்.