குறிஞ்சிப்பாடியில் சவேரியார் நகரில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க விரட்டுவதால் பயத்தில் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.