மஞ்சக்குப்பம் 12-வது வார்டு லட்சுமி நகரில் மர்ம நபர்கள் இறைச்சிக்கழிவுகளை அதிகளவில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே இறைச்சிக்கழிவுகளை அப்புறப்படுத்துவதோடு, அதை கொட்டிச்செல்லும் மர்மநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.