மரக்காணம்- திண்டிவனம் சாலையில் புதிதாக நான்குவழி சாலை விரிவாக்கப்பணியின் போது பயணியர் நிழற்குடைகள் இடித்து அகற்றப்பட்டன. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் புதிதாக நிழற்குடை ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மழையிலும், கொளுத்தும் வெயிலில் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறையினர் நிழற்குடை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.