பயனற்ற சமுதாயக்கூடம்

Update: 2025-04-27 17:39 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் கடந்த 2006-ம் ஆண்டு ரூ.10 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஏழை- எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருந்த இந்த சமுதாயக்கூடம் காலப்போக்கில் சிதிலடைந்த நிலையில் தற்போது பயன்பாடின்றி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்த சமுதாயக்கூடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்