இடிக்கப்பட்ட கோவில் கட்டப்படுமா?

Update: 2025-04-27 14:39 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குந்தாணிப்பாளையம் நத்தமேட்டில் பழமையான ஈஸ்வரன் கோவில் கட்டப்பட்டு சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் சுவர்கள் ஆங்காங்கே இடிந்து விழ ஆரம்பித்தது. இதன் காரணமாக கோவிலை இடித்து விட்டு கோவிலில் உள்ள சுவாமிகளுக்காக சிறிய கொட்டகை அமைக்கப்பட்டு அதில் சுவாமிகளை வைத்து பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சுற்று சுவர் இல்லாமல் உள்ளதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இந்த கோவிலை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்