புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் சுமார் 3 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சமையல் கியாஸ் இணைப்பு இல்லை. பலர் ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டுமே வைத்துள்ளனர். இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் மண்எண்ணெய் அத்யாவசிய தேவையாக உள்ளது. ஆனால் ஒரு குடும்ப அட்டைக்கு 100 மில்லி, 200 மில்லி என்ற அளவில் தான் மண்எண்ணெய் ஒதுக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே குடும்ப அட்டைக்கு குறைந்தபட்சம் மாதம் 3 லிட்டர் வழங்கும் அளவில் மண்எண்ணெய் ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.