சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், புழுதிபட்டி கிழக்குகளம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடுகளை கடித்து காயப்படுத்துகின்றன. மேலும் பொதுமக்களையும் தாக்கி கடிக்கின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வருவார்களா?