சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதிகளில் மாடுகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாலையில் செல்பவர்களை மாடுகள் அச்சுறுத்துவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்துக்கொள்வதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.