பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் உணவுப் பொருள் விற்கக்கூடிய மளிகை கடை, ஓட்டல் ஆகியவற்றில் குரங்குகள் புகுந்து பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் கடைகளில் குரங்கு விரட்டுவதற்கு என தனியாக ஆள் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேப்பந்தட்டையில் உள்ள குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.