மேல்மலையனூர் அருகே சாத்தம்பாடி ஏரிக்கரை சாலையோரத்தில் உள்ள மரங்களின் கிளைகள் சாலையை மறைத்தபடி செல்கிறது. இதனால் அவ்வழியாக வரும் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து மரக்கிளையை அகற்ற வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.