பண்ருட்டி அருகே மணம்தவிழ்ந்தபுத்தூரில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனை, இ-சேவை மையம் உள்ளது. இதன் அருகே உள்ள கழிப்பறை கட்டிடம் தற்போது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. இதனால் குழந்தைகள், பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்க சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த கழிப்பறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.