வடமதுரை அருகே வெள்ளப்பொம்மன்பட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. நிழற்குடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உதிர்ந்து வருவதால், கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் நிழற்குடை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கிறது. எனவே இந்த நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.