தஞ்சை மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை தெய்வானைநகரில் ரேஷன்கடை அருகே கழிவறை கட்டிடம் உள்ளது. இதனை ரேஷன் கடைக்கு வரும் பயனாளிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கழிவறை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து கழிவறை கட்டிடத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வணே்டும்.