பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் பல்வேறு இடங்களில் சில கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி செயல்பாடு இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.