கடலூர் புதுப்பாளையம் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.