பண்ருட்டி அ.மணி நகருக்கு செல்லும் சாலையில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மதுகுடிக்கின்றனர். போதை தலைக்கேறியதும் அவர்கள் அந்த வழியாக செல்லும் பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக பெண்கள் செல்லவே பெரும் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.