ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2025-04-13 18:11 GMT
சங்கராபுரம்- பூட்டை செல்லும் சாலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு உள்ள ஓடையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்கு சீராக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்