தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை துவரங்குறிச்சி ஊராட்சி பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளையும் நாய்கள் கடித்து கொன்றுவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.