பார்வதிபுரம் மேம்பாலத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்காக நிழற்குடையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இருக்கைகள் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே, சேதமடைந்து காணப்படும் இருக்கைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.