மதுரை கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் உள்ள பி.டி காலனி பகுதியில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை சேதப்படுத்துகின்றன. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை தாக்குகின்றன. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.