சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி

Update: 2025-04-06 16:00 GMT

கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே கட்டிபாளையத்தில் உள்ள குழந்தைகளின் நலன் கருதி அங்கு அரசு ஆரம்பப்பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் இதுவரை அந்த பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. இதன் காரணமாக பலமுறை அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து வகுப்பறைகளுக்குள் பாம்புகள், விஷ பூச்சிகள் சென்று வந்துள்ளது. இதனால் எந்த நேரமும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்