சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2025-04-06 15:21 GMT
சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி காப்புக்காடு அருகே அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் இல்லாதததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மருத்துவமனைக்குள் புகுந்து மது குடிக்கின்றனர். பின்னர் காலி மதுபாட்டிலை அங்கேயே வீசி உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்