பண்ருட்டி விழமங்கலம் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் அந்த பகுதி புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுதிணறல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.