சாவடி அருகே புதிதாக அமைக்கப்பட்ட தேசியநெடுஞ்சாலை மேம்பாலத்தில் உள்ள பெரும்பாலான மின் விளக்குகள் பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அங்கு விபத்து மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சேதமடைந்த மின் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.