ஆக்கிரமிக்கப்படும் மயானம்

Update: 2025-04-06 14:16 GMT

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம் பகுதி மக்களின் தேவைக்காக ராஜ வாய்க்கால் அருகில் மயனம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இறந்தவர்களின் உடலை புதைத்தும், தகனம் செய்தும் வந்தனர். ஆனால் சமீப காலமாக இந்த மயானத்திற்கு இறந்தவர்களை கொண்டு வருவதில்லை. ஆகையால் இந்த இடத்தை சிலர் அக்கிரிமிப்பு செய்துக்கொண்டு விவசாயம் செய்கின்னர். தற்போது மின் மயான எரியூட்டும் சுடுகாட்டை நாடி செல்கின்றனர். இதற்காக அருகில் உள்ள பரமத்தி வேலூர் அல்லது கரூரில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு செல்கின்றனர். இவ்வளவு தூரம் செல்வதை தவிர்க்கும் வகையில் இந்த மயானத்தை மின் மயானமாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்