புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் பூவரசங்குடி, வம்பன் நால்ரோடு ஆகிய பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்துச் செல்கின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள பழ வகை மரங்களை ஓடித்து சேதப்படுத்தி வருகின்றன. இப்பகுதியில் உள்ள குழந்தைகளை கடிக்க வருவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.