வெம்பக்கோட்டை பகுதிகளில் தெருக்களில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் மாடுகள் தாக்குகின்றன. எனவே சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?