ஊராட்சி மன்ற அலுவலகம் சீரமைக்கப்படுமா?

Update: 2025-03-30 17:42 GMT
சங்கராபுரம் அருகே சு.குளத்தூரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மேற்கூரையில் இருந்து சிமெண்டு காரைகள் அடிக்கடி பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன. இதனால் அங்கு வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், அலுவலர்கள், ஊழியர்கள் செல்லவே அச்சமடைந்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்