சேலம் பெரமனூர் மார்க்கபந்து ரோடு செல்லும் வழியில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகிலுள்ள மயான முன்புற நுழைவாயில் பகுதியில் பாதாள சாக்கடைக்காக அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்த குழிக்கு கான்கிரீட் அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இரும்பு கம்பிகள் வெளியே நீட்டி கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் எதும் நேரும் முன் அதிகாரிகள் கிடப்பில் கிடக்கும் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.