சேலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் சாலையில் மாமாங்கம் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே மாமாங்கம் பெரிய கிணறு உள்ளது. இந்த கிணறு இரும்பு மூடி கொண்டு மூடப்பட்டிருந்தது. தற்போது இந்த இரும்பு மூடி சேதமடைந்து துருபிடித்துள்ளது. குழந்தைகள் விளையாட்டாக கிணற்றின் திட்டின் மீது அமர்ந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்துள்ள மூடியை அகற்றி விட்டு புதிய மூடி அமைக்க வேண்டும்.