மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லை. தினமும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்ற முக்கிய நிறுத்தமாக இந்த இடம் உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வெயிலில் காத்திருந்து அவதி படும் நிலை இருக்கின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து அப்பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.