வாய்க்காலை ஆக்கிரமிக்கும் செடி-கொடிகள்

Update: 2025-03-30 14:57 GMT

கரூர் மாவட்டம் கவுண்டன்புதூர், செட்டித்தோட்டம், செல்வநகர், முத்தனூர் வழியாக புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரி நீர் கால்வாய் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டது. இந்த உபரிநீர் கால்வாய் வழியாக இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் வகையில் இந்த கால்வாய் வெட்டப்பட்டது. இந்நிலையில் இந்த கால்வாயின் வழியாக உபரி நீரும், மழை காலங்களில் மழை நீரும் சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டது. தற்போது தூர் வரப்பட்ட உபரிநீர் கால்வாய் முழுவதும் ஏராளமான செடி- கொடிகள் ஆள் உயரம் முளைத்து ஆக்கிரமித்து வருகிறது. இதனால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்