புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் தோப்புவயல் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும், கட்டுமாவடி -அறந்தாங்கி செல்லும் பிரிவு சாலையில் உள்ளது. இந்த பிரிவு சாலையில் சென்று மது வாங்கி விட்டும், அங்கு உள்ள பாரில் மது அருந்திவிட்டு சாலையில் வாகனத்தை ஏற்றும்போது அறந்தாங்கி -கட்டுமாவடி சாலையில் வரும் வாகனங்கள் மதுபிரியர்கள் செல்லும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விபத்தை தடுக்கும் வகையில் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.