சிதிலமடைந்த படிக்கட்டுகள்

Update: 2025-03-30 14:20 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மணவாளன் கரை பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த ரேஷன் கடை முன்பு அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டு சிதிலமடைந்து உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த படிக்கட்டுகள் மீது ஏறி ரேஷன் பொருட்கள் வாங்க பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படாமல் உள்ளதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்