பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரத்தில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இப் பகுதியில் உள்ள கோழி, ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கடித்து குதறுவதினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.