புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2025-03-30 12:44 GMT
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் விலக்கு மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை என்று வெலிங்டன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு அனைத்து மின்விளக்குகளும் மீண்டும் ஒளிர்கின்றன. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்