விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யூனியன் நாகம்பட்டி கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். தொட்டி இடிந்து விழுவதற்கு முன்னதாக அதனை அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.