நோய் தாக்குதலில் சிக்கி தவிக்கும் தெருநாய்கள்

Update: 2025-03-30 10:35 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா இளங்கார்குடி அம்மன் கோவில் தெருவில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவற்றில் பெரும்பாலான நாய்கள் ஒரு வகையான நோய் தாக்குதலில் சிக்கி தவிக்கின்றன. இவை பொதுமக்கள் கூடும் இடங்கள், குடியிருப்புகளில் புகுந்துவிடுகின்றன. இவற்றால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்லவும், அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்