நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டு 6 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையின் பெயர் பலகையில் இன்னும் மாற்றப்படாமல் நாகர்கோவில் நகராட்சி என எழுதப்பட்டுள்ளது. இது அங்கு வரும் பொதுமக்களை சற்று வருத்தமடைய செய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெயர்பலகையில் மாநகராட்சி என மாற்றிட வேண்டும்.
-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.