தெருவுக்கடை அருகில் உள்ள தட்டான்விளை பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் பொது குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீரை அப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிணற்றின் மேற்பகுதி திறந்தநிலையில் காணப்படுகிறது. பள்ளிக்கு வரும் சிறுவர்கள் கிணற்றின் அருகில் வந்து எட்டி பார்க்கின்றனர். இதனால் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தைகள் நலன்கருதி கிணற்றின் மீது கம்பிவலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகன், தட்டான்விளை.