விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பெரிய கண்மாயில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் கண்மாயில் அதிகளவில் குப்பைகள் தேங்குவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கருவேலமரங்களை முற்றிலுமாக அகற்றி கண்மாயினை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
