கடையநல்லூர் நகராட்சி 1-வது வார்டு குமந்தாபுரம் 8-வது தெருவில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.